கேரள வாழ் தமிழர்களுக்கு புதிய வாய்ப்பு..!

 | 

மொழி சிறுபான்மையினருக்கு சலுகை அளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷன் அறிக்கையால், கேரளாவில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னடர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

கேரளாவில், மொழி சிறுபான்மையினர் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றி ஆய்வு செய்யவும், அரசுக்கு பரிந்துரை வழங்கவும் திருவனந்தபுரம் திராவிட மொழிகளுக்கான சர்வதேச பள்ளியின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இதையடுத்து அவர், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்து, கேரள அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில், “மொழி சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில், அந்தந்த மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அனைத்து அரசு அறிவிப்புகளும், தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியிடப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள்களும் தமிழ், கன்னடத்தில் வெளியிடப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, கேரள தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பேச்சிமுத்து கூறுகையில், “தமிழகத்தில் ஒரு சமூகத்தினருக்கு என்ன சாதி சான்று வழங்கப்படுகிறதோ, அதே சான்று கேரளத்தில் வசிக்கும் அந்த சமூகத்தினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். 'அந்த கோரிக்கையின் அடிப்படையில் தான் குழு அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், மொழி சிறுபான்மையினரை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்றார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP