மாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் ஊழல், மாமன் மச்சான் அரசியல், மக்கள் பணம் சுரண்டல், வாரிசு அரசியல், பயங்கரவாதம் உள்ளிட்டவை முடிவுக்கு வந்துள்ளன என்று, பிரான்ஸ் யுனஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
 | 

மாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் ஊழல், மாமன் மச்சான் அரசியல், மக்கள் பணம் சுரண்டல், வாரிசு அரசியல், பயங்கரவாதம் உள்ளிட்டவை முடிவுக்கு வந்துள்ளன என்று, பிரான்ஸ் யுனஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரான்ஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸீல் உள்ள யுனஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார்.

அவரது உரையில், ‘ தொழில் செய்வதை எளிமைப்படுத்துவது வேலை வாய்ப்பை பெருக்குவது தான் எங்கள் பிரதான வேலை. இந்தியாவின் இளைஞர் பலம், பெண்கள் சக்தி உள்ளிட்டவற்றை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். கால்பந்தாட்டத்தின் முக்கிய வீரர் கோல் கீப்பர் ஆவார். அதுபோலத்தான் நாங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள எதையும் விட்டுவைக்க மாட்டோம். உலகின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் திட்டத்தை நங்கள் செயல்படுத்தியுள்ளோம். உலகின் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை செயல் படுத்தப்பட்டது இல்லை. 
சுற்றுசூழல் மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண உலக நாடுகள் எந்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ அதற்கு முன் நாங்கள் செய்வோம். இது காந்தி தேசம். இன்று அவரின் 150வது ஜெயந்தி கொண்டாடி வருகிறோம். 

உலகின் 140க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் வைஷ்ணவ ஜனதோ தேரே கஹியே பாடலை முணுமுணுக்கின்றனர். இதுவே காந்திக்கு நாம் செய்த மிகப்பெரிய மரியாதையை. இன்று இந்தியாவில் ஊழல் மாமன் மச்சான் அரசியல் மக்கள் பணம் சுரண்டல் வாரிசு அரசியல் பயங்கரவாதம் உள்ளிட்டவை முடிவுக்கு வந்துள்ளன. நாங்கள் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து இன்னும் 100 நாட்கள் நிறைவடையவில்லை. ஆனால் நாங்கள் எந்த கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை’என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP