Logo

மகாராஷ்டிரா அரசியல் : குழப்பத்திற்கு முற்றுபுள்ளி வைத்த சரத் பவார்!!

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, வெற்றி கூட்டணியான பாஜக-சிவசேனா இடையே ஆட்சி அமைப்பது குறித்த கருத்த வேறுபாடு தொடர்ந்து நிலவி வரும் நிலையில், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி அமைக்கவிருப்பதாக அரசல் புரசலாக வந்த தகவலை தொடர்ந்து, அம்மாநில தேர்தல் குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் தனக்கு ஆட்சி அமைக்கும் நோக்கம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்.
 | 

கடந்த சில நாட்களாக, பாரதிய ஜனதா கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால், அதன் கூட்டணியான சிவசேனா, பாஜகவிடம் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணையப்போவதாக சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வந்ததை தொடர்ந்து, தனக்கு ஆட்சி அமைக்கும் நோக்கம் சிறிதளவும் இல்லை எனவும், மக்களின் தீர்ப்பை ஏற்று எதிர்கட்சியில் அமர்ந்து செயல்பட தனது கட்சி தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் சரத் பவார்.

மேலும்,பாரதிய ஜனதா-சிவசேனா கட்சிகள் 25ஆண்டுகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளனர், ஆகையால், இன்று இல்லை என்றாலும், நாளை நிச்சயம் இருவரும் ஒன்று சேர்வர் என்று குறிப்பிட்ட அம்மாநில மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா ஆட்சி இல்லையெனில் ஜனாதிபதி ஆட்சிதான் மேற்கொள்ளப்படும் என்பதை அழுத்தமாக மேற்கோள் காட்டியுள்ளதன் மூலம், ஆட்சி அமைக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். 

இதை தொடர்ந்து, மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து உரையாடிய அவர், அவர்களின் நிலையை மேம்படுத்த அரசு மிக விரைவில் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP