ஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல் 

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கான இடத்தை உருவாக்குவதை அரசாங்கம் நிறுத்தி அனைத்து தேசியவாத தலைவர்களையும் விரைவில் விடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
 | 

கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றது. அதையொட்டிது ஜம்மு காஷ்மீரின் பல பிரிவினைவாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி ஆகிய மூவரும் தொடர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை விடுவிக்ககோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசியவாத தலைவர்களை அகற்ற அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அரசாங்கத்தின் இந்த முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் அரசியல் வெற்றிடம் உருவாக்கப்பட்டு, பயங்வாதிகளால் அது நிரப்படக்கூடும். எனவே ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கான இடத்தை உருவாக்குவதை அரசாங்கம் நிறுத்தி அனைத்து தேசியவாத தலைவர்களையும் விரைவில் விடுக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP