Logo

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரம் : ராம்ஜன்ம பூமியில் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான நாள் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராம்ஜன்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
 | 

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரம் : ராம்ஜன்ம பூமியில் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான நாள் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராம்ஜன்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். 

ஜார்க்கண்ட் மாநில ரகுபர்தாஸ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரும் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 23 வரை 5 கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று அம்மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ராம்ஜன்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது என்று கூறிய அவர், பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் போராட்டம் இத்துடன் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். 

இதனிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு 56 என்று சிலர் கூறி வருவதை தொடர்ந்து, அவரது மார்பளவு 56 ஆக இருக்காது 65ஆக இருக்கவே வாய்ப்புகள் உள்ளதாகவும், ஏதோ தவறாக குறிப்பிடப்பட்டு விட்டது போலும் என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். மேலும், கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் மக்களின் வாக்கு பாஜகவிற்கு இருக்கும் என்று நம்புவதாக கூறிய அவர், கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரே நாடாக இருந்த போதும், இரண்டு அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி வந்த நிலை தற்போது மத்திய அரசின் உத்தரவினால் மாறிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசு ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதையும், மோசடிகளுக்கு எதிராக செயலாற்றுவது தான் மத்திய அரசின் முக்கிய நோக்கம் என்பதையும் மக்களுக்கு ரஃபேல் தீர்ப்பே நிரூபித்து விட்டது என்று கூறிய ராஜ்நாத் சிங், இவை அனைத்திற்கும் காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தோடு, இனி பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை வந்தால், அவர்களின் பகுதிக்குள் சென்று தாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ரஃபேல் ஏவுகணை மூலம் இங்கிருந்தே தாக்குதல் மேற்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP