போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தபட்டதை தொடர்ந்து, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கிரிக்கெட்டிலும், அரசியலிலும் என்ன வேண்டுமென்றாலும் சம்பவிக்கலாம், முடிவு வரை காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 | 

போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தபட்டதை தொடர்ந்து, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கிரிக்கெட்டிலும், அரசியலிலும் என்ன வேண்டுமென்றாலும் சம்பவிக்கலாம், முடிவு வரை காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, வெற்றி கூட்டணி பாஜக-சிவசேனாயிடையான கருத்த வேறுபாடுகளினால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இதை தொடர்ந்து,சில தினங்கள் முன்பு கருத்து வேறுபாடுகள் வலுவடைந்த நிலையில், இரு கட்சிகளும் கூட்டணியை விட்டு விலகி விட்டன.

இந்நிலையில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்குமாறு கூறி அழைப்பு விடுத்திருந்தார். எனினும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த கட்சியாலும் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க இயலவில்லை. 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலுடன் கடந்த செவ்வாயன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்த சிவசேனா, தற்போது இருவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது. 

இதனிடையில், டெல்லியிலிருந்து மகாராஷ்டிரா வந்தடைந்துள்ளார் பாரதிய ஜனதா கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி. இதை தொடர்ந்து, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தற்போது தான் டெல்லியிலிருந்து வந்திருப்பதால் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து சரியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட்டிலும் சரி அரசியலிலும் சரி எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம், அதனால் கிரிக்கெட்டில் இறுதி பந்து வரை காத்திருப்பது போல, அரசியலிலும் தீர்மானம் எடுக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களின் நலனிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் தொடரப்பட வாய்ப்புகள் உள்ளதென்று கூறிய அவர், ஆட்சியில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு மக்களின் நலனில் நிச்சயமாக அக்கறை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையில், சிவசேனாவை சேர்ந்த ஒருவரே முதலமைச்சர் பதவியில் அமர்வார் என்று என்.சி.பி கட்சியின் தலைவரான நவாப் மாலிக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP