சர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சர்வதேச அளவிலேயே பொருளாதார நிலை மந்தமாகத்தான் உள்ளது என்றும், உலகளவிலான வர்த்தகம் மந்தமடைவது புதிதல்ல எனவும் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 | 

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விளக்கமளித்து டெல்லியில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், ‘சர்வதேச அளவில் வளர்ச்சி விகிதம் 3.2% ஆக குறைந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே கூட பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாக உள்ளது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. பொருளாதா சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு. பொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்; அதுபோன்ற நடவடிக்கை தொடரும். தொழில்துறையினருக்கு அடிப்படை வசதிகளுக்கான அனுமதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித தாமதமும் இன்றி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP