Logo

பேட்டை ரௌடியாக மாறிய இம்ரான்கான்; சூப்பர் ஸ்டார் ஆன பிரதமர் மோடி 

இம்ரான்கான் விபத்தில் பிரதமரானவர். நம் ஊர் நடிகர்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்துவது போல வந்து அமர்ந்தவர். அதனால் அவர் இவ்வாறு பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவர்கள் தேர்வு செய்த அதிகாரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு ஐநாவில் இருக்கும் இந்தியாவின் நிரந்தர துாதுக்குழுவின் முதல் செயலாளர் விதிஷா மைத்ராவே உதாரணம்.
 | 

பேட்டை ரௌடியாக மாறிய இம்ரான்கான்; சூப்பர் ஸ்டார் ஆன பிரதமர் மோடி 

முன் ஏர் போன வழி பின் ஏர் என்று ஒரு பழமொழி உள்ளது. உழும் போது விவசாயி முன்னால் உள்ள ஏரை சரியான திசையில் ஓட்டும் போது பின்னால் அவரும் ஏர் அதைத் தொடர்ந்து செல்லும். அதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியது இல்லை என்பது அதன் பொருள். இந்த விதி வேளாண்மைக்கு மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்கும் பொருந்தும். இதை ஐநா சபையில் உரையாற்றிய மோடி குழு நிரூபித்து இருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐநாவின் பொதுசபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் சென்றனர். அமெரிக்காவில் ஒரு புறம் நலமா மோடி நிகழ்ச்சி நடந்த அதே காலகட்டத்தில் தான், இம்ரான்கான் அங்கு சென்றார். இருவருக்குமான வரவேற்பு நிகழ்ச்சியே உலகம் எதை எதிர்பார்க்கிறது என்பதை வெளிப்படையாக காட்டியது. 

இதில் இருந்து இம்ரான்கான் பாடம் கற்றிருக்க வேண்டும். ஆனால் ஐநாவில் அவர் பேசியது அவர் எதில் இருந்தும் பாடம் கற்க வில்லை, குறிப்பாக பிரதமர் பதவிக்கே அவர் தன்னை தயார் படுத்திக் கொள்ளவில்லை என்று காட்டுகிறது.

ஐநாவில் மோடி பேசும் போது, 90 சதவீதம் இந்தியா பற்றியும், 10 சதவீதம் உலகத்தை பற்றியும் இருந்தது. ஆனால் இம்ரான்கான் பேச்சு முழுக்க காஷ்மீரை மட்டுமே சுற்றி இருந்தது. ஒரு நல்ல வாய்ப்பை, தன் நாட்டின் வளத்தை பெருக்குவதற்கான சந்தர்ப்பத்தை அடுத்த வீட்டை எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்ததால் இம்ரான்கான் இழந்து விட்டார். 

அம்மா இருப்பாளாம் நிர்வாணமாக, கும்பகோணத்தில் செய்தானாம் கோதானம் என்கிற கதையாக பாகிஸ்தான் உள்நாட்டில் பல பிரச்னைகளை சந்திக்கும் வேளையில், இம்ரான்கான் காஷ்மீர் பற்றி கவலைப்படுகிறார்.

அதிலும் இவர் காஷ்மீரில் வசித்தால் துப்பாக்கி துாக்கி இருப்பேன் என்று தோள் தட்டுகிறார். தீவிரவாதத்திற்கு அதிக விலை கொடுத்ததாக ஒப்புதல் அளிக்கும் அவரே பேட்டை ரவுடி போல பேசி அந்த நாட்டின் தன்மையை உலக நாடுகளுக்கு புரியவைத்துவிட்டார்.

மோடி, இம்ரான்கான் ஆகியோர் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்றும், எப்படி இருக்க கூடாது என்றும் எடுத்துக் காட்டி விட்டனர். மோடிக்கு பின்னணியில் அரசியல் அனுபவம், இந்த நாட்டின் மீது பற்றுக் கொண்ட கொள்கையின் பின்புலம் போன்ற பல விஷயங்கள் உள்ளன. 

இம்ரான்கான் விபத்தில் பிரதமரானவர். நம் ஊர் நடிகர்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்துவது போல வந்து அமர்ந்தவர். அதனால் அவர் இவ்வாறு பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவர்கள் தேர்வு செய்த அதிகாரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு ஐநாவில் இருக்கும் இந்தியாவின் நிரந்தர துாதுக்குழுவின் முதல் செயலாளர் விதிஷா மைத்ராவே உதாரணம்.

ஒரு நாட்டின் பிரதமர் தன் நாட்டின் ஒரு பகுதியை பற்றி பேசுகிறார். தான் ஒரு அதிகாரி அவருக்கு பதில் கூறுகிறோம் என்ற எண்ணம் இல்லாமல் அவருக்கு இணையான பதவியில் இருப்பவர் போலவே பொங்கி எழுந்து பாகிஸ்தான் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டார். இதன் மூலம் தீவிர வாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகள் மனதிலும் அந்த நினைவை மீண்டும் ஏற்படுத்தியது அந்த பேச்சு.

ஒசாமா பின்லேடனுக்கு பாதுகாப்பு அளித்ததை மறுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியதன் மூலம், இவருக்காக பாகிஸ்தான் உள்ளே சென்று கொலை செய்தீர்களே, காஷ்மீரில் இவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு நாங்கள் என்ன செய்வது என்று அமெரிக்காவிற்கும் மறைமுகமான கேள்வி எழுப்பினார்.

ஒரு அதிகாரி இவ்வளவு துணிச்சலாக இருக்க, பிரதமர் தான் காரணம். அவர் முழுமையான சுந்திரம் கொடுத்ததால் தான் அதிகாரிகள் இவ்வாறு செயல்பட முடிந்தது. பிரதமரே வேறு ஒரு அதிகார பீடத்திடம் அனுமதி பெற்றுதான் செயல்பட முடியும் என்றால், ஐநாவில் இம்ரான்கான் ஹீரோவாக மாறியிருப்பார். 

கடவுள் புண்ணியத்தில் சுயமாக சிந்தித்து, செயல்படும் பிரதமரை இந்த நாட்டு மக்கள் தேர்வு செய்துள்ளார்கள். அதனால் இந்தியா வேகமாக வளர்கிறது. பாகிஸ்தான் பிரதமர் புலம்பத் தொடங்கி உள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP