ரஃபேல் இருந்திருந்தால் இங்கிருந்தே தாக்கியிருக்கலாம்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால் பாலகோட் வான்வெளி தாக்குதலுக்காக பாகிஸ்தான் சென்றிருக்க தேவையில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 | 

ஹரியானா மாநிலம் கர்னலில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால் பாலகோட் வான்வெளி தாக்குதலுக்காக பாகிஸ்தான் சென்றிருக்க தேவையில்லை. இந்தியாவில் இருந்துகொண்டே பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம்’ என்று அமைச்சர் பேசியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக தான், பிரான்ஸ் சென்ற  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸிடம் இருந்து, ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP