தபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா ??

இந்திய தபால் துறை வழங்கும் பிரபலமான சிறுசேமிப்பு திட்டங்களில் தபால் அலுவலக மாத வருமான திட்டமும் ஒன்றாகும்.
 | 

தபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா ??

இந்திய தபால் துறை வழங்கும் பிரபலமான சிறுசேமிப்பு திட்டங்களில் தபால் அலுவலக மாத வருமான திட்டமும் ஒன்றாகும். 

இந்திய தபால் துறையின் பல்வேறு கிளைகளில் முதலீடு செய்யும் வகையில் அமைய பெற்றிருக்கும் இந்த சேமிப்பு திட்டத்திற்கான கணக்கு, ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் என்று கூறப்படுகின்றது. நிலையான வருமானத்தை விரும்பும் மூத்த குடிமக்களுக்கு தபால் துறையின் இந்த திட்டம் பெரும் ஆதரவாக இருக்கும் என்று தபால்துறையினர் கூறுகின்றனர்.

இத்தகைய நன்மைகள் உள்ள இந்த திட்டத்தில் இந்தியாவில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் முதலீடு செய்யலாம் எனவும், 10 வயது நிரம்பிய குழந்தைகள் கூட இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தபால் துறை தெரிவித்துள்ளது. மேலும் 2,3 பேர் இணைந்தும் தொடங்க இயலும் இந்த கணக்கை, தபால் அலுவலகத்தின் ஓர் கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு எளிதாக மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர் தபால் துறை அதிகாரிகள்.

இதை தொடர்ந்து, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் இந்தியர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.1,500 முதல், 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்றும் கூட்டு கணக்காக இருக்கும் பட்சத்தில் அதிகபட்ச தொகையாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான வட்டி வகிதத்தை மத்திய அரசே நிர்ணயிக்கிறது. மத்திய அரசின் வருமானத்தை பொறுத்து ஓரோர் காலாண்டிலும் இதற்கான விகிதம் மாற்றியமைக்கப்படும். மேலும், இந்த வட்டி விகிதம் ஆண்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, மாதந்தோறும் செலுத்தப்படும். இதை தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கணக்கிற்கான வட்டி தொகை, ஆட்டோ கிரெடிட் மூலம் குறிப்பிட்ட ஒருவரது கணக்கிற்கு காசோலைகள் அல்லது ஈ.சி.எஸ் சேவை மூலம் வந்தடையும் என்று தபால்துறை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்துள்ள தொகை ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நிலையில், முதலீடு செய்த ஓராண்டிற்கு பின்னர் பணத்தை திரும்ப பெற வேண்டுமெனில் அதற்கான அபராத தொகையாக 2 சதவீதமும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் திரும்ப பெற வேண்டுமெனில் அதற்கான அபராத தொகையாக 1 சதவீதமும் பிடிக்கப்பட்டு பாக்கி தொகை முதலீட்டாளர்களை சென்றடையும் என தபால்துறை கூறியுள்ளது.

எனினும், இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைகளுகக்கு வருமானவரி சலுகைகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP