Logo

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 1

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருக்கும் கட்டிடத்திற்கு முன்னர், அங்கே ஆலயம் இருந்ததாக ஒரு தரப்பினரும், மசூதி இருந்ததாக மறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், அங்கே ஆலயம் தான் இருந்தது என அதன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த, தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் குறிப்பிட்டுள்ளார்
 | 

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 1

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருக்கும் கட்டிடத்திற்கு முன்னர், அங்கே ஆலயம் இருந்ததாக ஒரு தரப்பினரும், மசூதி இருந்ததாக மறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், அங்கே ஆலயம் தான் இருந்தது என அதன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த, தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் குறிப்பிட்டுள்ளார்.

ராமஜன்ம பூமி வழக்கில், உச்ச நீதிமன்றம், வரும் நவம்பர் 17 அன்று தீர்ப்பளிக்க உள்ள நிலையில், இது குறித்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கேகே முகம்மத், ராம்ஜன்ம பூமியில் ஆலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் குறித்தும், அங்கே அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் குறித்தும் விரிவாக பேசியுள்ளார். 

ராமஜன்ம பூமியில் ஆலயம் இருந்ததற்கு, மூன்று வகையான ஆதாரங்களை அவர் முன் வைத்துள்ளார்.

1. தொல்லியல் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்கள் :

முதல் ஆராய்ச்சியின் ஆதாரங்கள் : 

1976-77 ஆண்டில், ராமஜன்ம பூமியின் கலாச்சாரம் மற்றும்  பாரம்பரியத்தை கண்டறியும் நோக்கத்துடன், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம், தொல்லியல் ஆய்வாளர் பிபி.லால் - ன் கீழ் ஆராய்ச்சி மேற்கொண்டது. ஆனால், அப்போது, ராமஜன்ம பூமி சர்ச்சைக்குரிய பிரச்சனையில் சிக்கியிருந்த நிலையில், சாதாரண மக்களுக்கு அங்கே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எனினும், தொல்லியல் ஆய்வாளர்கள் என்னும் காரணத்தினால் அவர்களுக்கு அங்கே அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியின் மேற்பரப்பில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது, ஆலயத்தின் எஞ்சியிருந்த பாகங்களினால், மசூதியின் 12 தூண்கள் கட்டப்பட்டிருந்தை அந்தக்குழு கண்டுப்பிடித்தது. அந்த நேரத்தில், ராமஜன்ம பூமியில் இத்தகைய பிரச்சனைகள் இல்லாததால், இவர்களது கண்டுப்பிடிப்புகள் எதுவும் பெரிதாக பேசப்படாத நிலையில், பிபி.லால் குழுவும் அதை பெரிதுபடுத்தவில்லை.

ஆலயத்தின் எஞ்சியிருந்த பாகங்களினால் தான் மசூதியின் தூண்கள் கட்டப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வர காரணமாக இருந்தது, அங்கே கண்டெடுக்கப்பட்ட"பூர்ண கலசம்" ஆகும். இதை நிரூபிக்க வேண்டும் என்றால், குதுப்மினாரின் வரலாற்றை நாம் சற்று திருப்பி பார்க்க வேண்டும். 27 ஆலயங்களின் அழிவுக்கு பின்னரே அங்கே குதுப்மினார் கட்டப்பட்டதாகவும், அங்கே பல பூர்ண கலசங்களும், கடவுள்களின் உருவ சிலைகளும் கண்டெடுக்கப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. அதை நிரூபிக்கும் வகையில், குதுப்மினாரின் வாயிலிலும் இது குறித்த விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே போன்ற பூர்ண கலசங்கள் அயோத்தியிலும் கண்டுப்பிடிக்கப்பட்டதால், அங்கே ஆலயம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், ராமஜன்ம பூமியில், பல விலங்குகள் மற்றும் டெரக்கோட்டா உருவங்களும் கண்டெடுக்கப்பட்டன. முஸ்லீம் மதத்தில், விலங்குகள் மற்றும் மனித உருவங்கள் "ஹராம்" (பாவம்) என்று கூறப்படுவதால், அங்கே மசூதி இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகியது.ஆனால், அப்போது அங்கே ஆலயம் இருந்ததா, இல்லையா என்ற கேள்வி எழுப்பப்படாததை தொடர்ந்து, இந்த ஆராய்ச்சிகளின் கண்டுப்பிடிப்புகள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

தொடரும்.......

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 2

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 3

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP