Logo

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 2

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருக்கும் கட்டிடத்திற்கு முன்னர், அங்கே ஆலயம் இருந்ததாக ஒரு தரப்பினரும், மசூதி இருந்ததாக மறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், அங்கே ஆலயம் தான் இருந்தது என அதன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த, தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் குறிப்பிட்டுள்ளார்.
 | 

ராமஜன்ம பூமியில் ஆலயம் இருந்ததற்கு, மூன்று வகையான ஆதாரங்களை அவர் முன் வைத்திருந்த நிலையில், பிபி.லால் - ன் கீழ் மேற்கொண்ட முதல் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரமாக, இந்து ஆலயங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சில முக்கிய பொருட்களும், ஆலயத்தின் எஞ்சியிருந்த பாகங்களினால், மசூதியின் 12 தூண்கள் கட்டப்பட்டிருந்தையும் அந்தக்குழு கண்டுப்பிடித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

இரண்டாம் ஆராய்ச்சியின் ஆதாரங்கள் : 

1990 ஆம் ஆண்டு, வரலாற்றாசிரியர்களான ரொமிலா தாப்பர், டி.என்.ஜா மற்றும் ஆர்.எஸ்.ஷர்மா மூவரும், பிபி.லால் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஆலயம் இருந்ததற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என தவறாக அறிக்கை விட்டனர். இரு தரப்பினரின் ஆராய்ச்சிகளையும் கேட்டறிந்த தொல்லியல் ஆய்வாளர் மற்றும் அப்போதைய ஐஏஸ் அதிகாரியான மஹாதேவன், மீண்டும் ஒரு ஆய்வு மேற்கொள்ள பரிந்துரைத்ததை தொடர்ந்து, இரண்டாவது முறையாக, 2003 ஆம் ஆண்டு, அயோத்தியாவில் பூமியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த முறை மேற்பரப்பில் மட்டுமில்லாமல், ஆழம் வரை சென்று ஆராய்ந்ததன் விளைவாக, இந்து ஆலயம் இருந்ததற்கான பல சான்றுகள் கிடைத்தன. முன்னர், ஆலயத்தின் எஞ்சியிருந்த பாகங்களினால், மசூதியின் 12 தூண்கள் கட்டப்பட்டிருந்தாக கூறப்பட்ட நிலையில், தற்போது, 50 தூண்கள் கட்டப்பட்டிருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும், "ப்ரணாலா", "அபிஷேக ஜலம்", "மகர ப்ரணாலி" என இந்துக்களின் வழிபாடுகளில் பிரதானமாக விளங்கும் பொருட்கள் அனைத்தும் கண்டெடுக்கப்பட்டன. 

ஆனால், அங்கே இந்துக்களின் ஆலயம் இல்லாமல், புத்த மதத்தை சேர்ந்த ஆலயமோ, சமண மதத்தை சேர்ந்த ஆலயமோ இருந்திருக்கலாம் என்ற கேள்விகள் எழ, அந்த பகுதிகளில் சமணம் மற்றும் புத்த மதங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் தென்படாத காரணத்தால், அந்த கேள்விகள் அர்த்தமற்றவையாகின. மேலும், விஷ்ணுவின் ஆலயம் அங்கே இருந்ததற்கு சான்றாக, "விஷ்ணு ஹரி ஷீலா பலாக்" என்ற கல்வெட்டும் கண்டுடெடுக்கப்பட்டது.

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 2

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 2

பெயர் பெற்ற தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த இரண்டாம் ஆய்வில், அங்கே ஆலயம் இருந்ததற்கான பல சாத்தியக்கூறுகள் பல இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தொடரும்.................

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 1

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 3

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP