வாக்குப்பதிவு சரிபார்ப்பு : எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனு தள்ளுபடி

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 50% வாக்குகளை வி.வி. பேட் ஒப்புகைசீட்டுடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என திமுக காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 | 

வாக்குப்பதிவு சரிபார்ப்பு : எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனு தள்ளுபடி

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 50% வாக்குகளை, வி.வி. பேட் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், வரும் 12 மற்றும் 19 -ஆம் தேதிகளில் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த சூழ்நிலையில், நடந்து முடிந்த 5 கட்ட தேர்தல்களில், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டில் சிக்கல்கள் இருந்ததாக புகார் அளிக்கப்பட்டது. மேலும், வாக்காளர்கள் தாம் எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள  வி.வி. பேட் இயந்திரத்தில் வரும் ஒப்புகை சீட்டு மூலம் அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, ஒரு மக்களவை தொகுதியில் 5 வி.வி. பேட் இயந்திரங்களி்ன் ஒப்புகைசீட்டுடன், பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால், பதிவான வாக்குகளில் 50% வாக்குகளை வி.வி. பேட் ஒப்புகைசீட்டுடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என காங்கிரஸ், தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "ஏற்கெனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, உச்சநீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டது. அதாவது, 5% வி.வி. பேட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை மட்டுமே பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதற்கு மேல் சரிபார்த்தால் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்" எனக் கூறி 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP