விராட்டின் 31வது பிறந்தநாள் கடிதம்!!!

இன்று 31வது பிறந்தநாள் கொண்டாடும் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மான்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலி, தனது சமூக வலை தள பக்கங்களில், தனக்கு தானே வாழ்த்து தெரிவித்து கொள்ளும் வகையிலும், நம்பிக்கையூட்டி கொள்ளும் வகையிலும், கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 | 

விராட்டின் 31வது பிறந்தநாள் கடிதம்!!!

இன்று 31வது பிறந்தநாள் கொண்டாடும் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மான்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலி, தனது சமூக வலை தள பக்கங்களில், தனக்கு தானே வாழ்த்து தெரிவித்து கொள்ளும் வகையிலும், நம்பிக்கையூட்டி கொள்ளும் வகையிலும், கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரும் வியந்து காணும் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான விராட் கோலி, 239 ஓடிஐ மேட்ச்களில் 11520 ரன்கள் அடித்து இரண்டாவது அதிகபட்ச ரன் பெற்றவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதை தொடர்ந்து 82 டெஸ்ட் மேட்ச்களில் 7066 அடித்து உலகளவில் 7ஆம் இடத்தில் உள்ளார். 

இதை தொடர்ந்து, தனக்கு தானே வாழ்த்து தெரிவித்து கொள்ளும் ரீதியில், தனது சமூக வளை தளங்களில் ஓர் கடிதம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் கோலி.

அந்த கடிதத்தில், அவர் இனி வரும் காலங்களில் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை கண்டு துவண்டு விழாமல் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும், தன்னை விட அதிகமாக தன் குடும்பத்தை நேசிக்க வேண்டும்  என்பனவற்றை குறிப்பிட்டுள்ளார்.

விராட்டின் 31வது பிறந்தநாள் கடிதம்!!!

"இன்று பிறந்தநாள் காணும் சிக்குவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வருங்காலத்தை குறித்து நிச்சயமாக உன் மனதில் பல கேள்விகள் நிறைந்திருக்கும். ஆனால் அவை அனைத்திற்கும் பதில் கிடைத்துவிட்டால், பின்னர் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும். எத்தகைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், அவை அனைத்தையும் நாம் கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எப்போதும் செயல்படு. 

சில சமயங்களில் நமக்கு நெருக்கமான உறவுகள் நம்மை புரிந்து கொள்ளாமல் போகலாம். அத்தகைய நேரங்களில் அவர்களை வெறுப்பதை விடுத்து, ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள். அவர்களை விட இந்த உலகில் எவராலும் உன்னை நேசிக்க முடியாது. அவர்களை நீ நேசிக்கிறாய், உனது வாழ்வில் அவர்களுக்கு நீ நிச்சயமாக முக்கியத்துவம் அளிக்கிறாய் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதில் தான் அன்பு இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

சாதனைகள் புரிந்து, இந்திய கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்து வரும் விராட் கோலியின் 31வது பிறந்தநாளிற்கு, நம்முடைய வாழ்த்துக்களையும் அவருக்கு பரிசாக அனுப்பி வைப்போம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP