வருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு இல்லை

வருமான வரிக்கணக்கு தாக்கலுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு என்கிற தகவலில் உண்மையில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 | 

வருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு இல்லை

வருமான வரிக்கணக்கு தாக்கலுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு என்கிற தகவலில் உண்மையில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு நாளையே கடைசி நாள் ஆகும். ஆனால், தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவியது.

இந்த நிலையில், இந்த தகவலில் உண்மை இல்லை என்றும், நாளையுடன் அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு என்று வெளியான தகவல் தவறு என்றும் வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது. வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது என்றும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP