Logo

குவைத் நாட்டில் கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு - சுஷ்மா நடவடிக்கை

குவைத் நாட்டில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த புதுச்சேரி காமராஜர் நகர் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகனின் மனைவி விஜயலட்சுமியை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டார்.
 | 

குவைத் நாட்டில் கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு - சுஷ்மா நடவடிக்கை

குவைத் நாட்டில் கொத்தடிமையாக இருந்து பெண் மீட்பு - சுஷ்மா நடவடிக்கை
    
குவைத் நாட்டில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த இந்திய பெண்ணை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டார். 

புதுச்சேரி காமராஜர் நகர் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகனின் மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக முகவர் மூலம் குவைத்த நாட்டுக்கு வேலைக்கு சென்றார். ஆனால், அந்த முகவரின் தவறான வழிகாட்டுதலால் ஒரு வீட்டில் கொத்தடிமையாக விஜயலட்சுமி வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். 

கடந்த 3 மாதங்களாக மிகுந்த சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதால் மனமுடைந்த விஜயலட்சுமி அங்கு வி‌ஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  பின்னர் குவைத் அரசு ஆஸ்பத்திரியில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுபற்றி விஜயலட்சுமியின் குடும்பத்தினர் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியினரை தொடர்பு கொண்டு குவைத் நாட்டில் இருந்து விஜயலட்சுமியை மீட்குமாறு கேட்டு கொண்டனர்.

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தகவல் தெரிவித்து முழு விவரங்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து சுஷ்மா சுவராஜ் குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விஜயலட்சுமியை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்தார். பின்னர் விஜய லட்சுமியை எந்தவித பாதிப்பும் இன்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP