கம்யூனிஸ்டுகளின் செயல் வெட்கக்கேடானது: மோடி

சபரிமலை விவகாரத்தில் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு மற்றும் கட்சியின் செயல்பாடுகள் வெட்கக்கேடாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி காட்டமாக கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று கேரளா சென்றிருந்தார்.
 | 

கம்யூனிஸ்டுகளின் செயல் வெட்கக்கேடானது: மோடி

சபரிமலை விவகாரத்தில் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு மற்றும் கட்சியின் செயல்பாடுகள் மிகவும் வெட்கக்கேடாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி காட்டமாக கூறினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று கேரளா சென்றிருந்தார்.  கொல்லத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

இந்திய கலாசாரம், ஆன்மிகம் மற்றும் வரலாற்றுக்கு கம்யூனிஸ்ட்கள் மரியாதை அளிக்கமாட்டார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். 

ஆனால், சபரிமலை விவகாரத்தில் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின்  செயஸ்பாடுகள் மிகவும் வெட்கக்கேடாக உள்ளது. இதுபோன்று  மோசமாக செயல்படும் கட்சியையும், ஆட்சியையும் வரலாறு இதுவரை கண்டதில்லை.

அவர்கள் இந்த விஷயத்தில் இவ்வளவு வன்மமாக செயல்படுவார்கள் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திருக்கமாட்டார்கள்.

பாலின பாகுபாடு கலையப்பட வேண்டும், சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று காங்கிரஸும், கம்யூனிஸ்டும் வெளியே உரக்க பேசி வருகின்றனர். 

ஆனால்,  முஸ்லிம் பெண்களின் நலனைக்  கருத்தில் கொண்டு, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர, மத்திய பாஜக அரசு என்னதான் தீவிரமாக முயற்சித்தாலும், அதற்கு நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும்தான் பெரிய தடையாக உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெயர் தான் வேறு வேறு. ஆனால், ஊழல் புரிவதிலும், இனவாத, மதவாத அரசியல் செய்வதில் இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை.

அதேசமயம், மத்திய பாஜக அரசு இன, மத பாகுபடின்றி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப் பிரினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகைச் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை அமல்படுத்தியுள்ளது என்று மோடி பேசினார்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP