பாஜகவின் முதல் நாடாளுமன்ற கட்சி கூட்டம் தொடங்கியது

பாஜகவின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் தொடங்கியது.
 | 

பாஜகவின் முதல் நாடாளுமன்ற கட்சி கூட்டம் தொடங்கியது

பாஜகவின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் தொடங்கியது.

மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதிவயேற்றார்.

இந்நிலையில் முதல் நாடாளுமன்ற கட்சி கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் தொடங்கியது. 

இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் புதிதாக தோந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிகளுடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் கலந்துரையாடுகிறார்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது. கடந்த வாரம் ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் செய்னி காலமானதை தொடர்ந்து நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெறவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP