காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் செக்டார் பகுதியில் பாதுகாப்புப்படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, விரர்கள் அவர்கள் மீது பதில் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்
 | 

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் செக்டார் பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டிருந்த பாதுகாப்புப்படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கித் தாக்குதலுக்கு வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

காஷ்மீர் பகுதியில் ரஜோரி மற்றும் பூஞ்ச் செக்டார் பகுதியில், தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக வந்த தகவலையடுத்து, இந்திய பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது திடீர் தாக்குதல் தொடுத்தனர்.

அதையடுத்து பாதுகாப்புப் படையினர் அவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இருதரப்பினருக்குமிடையே நடைபெற்று வரும் தாக்குதலில், பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP