உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வெளியீடு!

முதல் முறையாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை இந்தி, கன்னடம் உள்ளிட்ட 6 பிராந்திய மொழிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வெளியீடு!

முதல் முறையாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி வருகின்றன.

ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு வசதியாக அந்தந்த பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கெனவே சட்ட அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதையொட்டி அதற்கான நடவடிக்கைகளை உச்சநீதிமன்ற அலுவல் பிரிவு எடுக்கத் தொடங்கியுள்ளது.  அதன் ஓர் அம்சமாக உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வெளியிடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக  இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் அந்தந்த மாநில அரசுகளிடமிருந்து வரும் வேண்டுகோள்களின் அடிப்படையில் ஏனைய மொழிகள் அனைத்திற்கும் படிப்படியாக விரிவு படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, முதற்கட்டமாக இந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, அசாமி, ஒடியா ஆகிய 6 மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அதற்கான மென்பொருள் வேலைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

எந்த மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு அதிகமான மேல்முறையீட்டு வழக்குகள் வருகின்றன என்பதை பொறுத்து முதற்கட்டமாக இந்த 6 மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த, 2017ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற நீதித்துறை சார்ந்த விழாவில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அனைத்து மாநிலங்களிலும் உயர்நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள், அந்தந்த மாநில மாெழிகளில் மாெழிபெயர்க்கப்பட வேண்டும் எனக் கூறினார். 

அதாவது, உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படும் நிலை நடைமுறையில் இருந்த நிலையில், தீர்ப்பு வெளியாகி, 36 மணி நேரங்களில், அந்தந்த மாநில மாெழிகளில் அவை மாெழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் பிராந்திய மாெழிகளில் மாெழிபெர்ப்பு செய்வது குறித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகோய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உச்சநீதிமன்ற மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛‛முதலில் ஆறு பிராந்திய மாெழிகளில் தீர்ப்புகளை மாெழிபெயர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

அவற்றிற்கான சாப்ட்வேர்கள் உருவாக்கப்பட்டு, அப்பணி விரைந்து செயல்படுத்தப்படும். அதே போல், மாநிலங்களிலிருந்து வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில்,  அடுத்தடுத்த கட்டங்களில் பிற மாநில மாெழிகளிலும் தீர்ப்புகளை மொழி பெயர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தனிநபர் சம்பந்தப்பட்ட சிவில், கிரிமினல் வழக்குகள், நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், திருமண வாழ்க்கை குறித்த வழக்குகளுக்கு விண்ணப்பத்தின் அடிப்படையில் தீர்ப்பின் மாெழிபெயர்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’’ என அவர் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP