மகாத்மா காந்திக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடும் ரஷ்ய அரசு!

அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது.
 | 

மகாத்மா காந்திக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடும் ரஷ்ய அரசு!

அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. 

இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். இன்று அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் பற்றி குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, சென்னைக்கும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இரு நாட்டுக்கு இடையே உள்ள வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், எரிசக்தி துறை, விமானத்துறை உள்ளிட்ட 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பிற்கு பின்னர், ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வெங்கடேஷ் ஷர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  "மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் விழா அக்டோபர் 2ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, அவரது சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய அரசு சார்பில் ரஷ்யாவுக்கு நன்றி" என தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP