பத்திாிகையாளா்களுக்கும் தபால் ஓட்டு- தோ்தல் கமிஷனுக்கு கோாிக்கை

நாடு முழுவதும், 17வது மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், பொதுமக்கள், தனியார் துறை ஊழியர்கள், வர்த்தகர்கள் என அனைத்து பிரிவினரும் ஓட்டளிக்கின்றனர்.
 | 

பத்திாிகையாளா்களுக்கும் தபால் ஓட்டு- தோ்தல் கமிஷனுக்கு கோாிக்கை

நாடு முழுவதும், 17வது மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், பொதுமக்கள், தனியார் துறை ஊழியர்கள், வர்த்தகர்கள் என அனைத்து பிரிவினரும் ஓட்டளிக்கின்றனர். 

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் உள்ளிட்டோர் தங்கள் ஜனநாயக கடமையாற்ற, அதாவது அவர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த, தபால் ஓட்டு என்ற நடைமுறை அமலில் உள்ளது. அதன் படி, தேர்தல் நாளுக்கு முன்னரே, தபால் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. 

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஜனநாயக கடமையாற்ற முடியாத நிலையே உள்ளது. 

சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கோல்கட்டா, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பெருநகரங்களில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் பெரும்பாலானோர், தங்கள் சொந்த ஊரை விட்டு, அங்கு சென்று பணியாற்றுபவர்களாகத்தான் உள்ளனர்.

தேர்தல் நாளன்று, இவர்கள் பணியாற்றினால் மட்டுமே, நாட்டு நடப்பு, பொதுமக்களை சென்றடையும். ஜனநாயகத்தின் கண்ணாடியாக செயல்படும் ஊடகவியலாளர்கள், தங்கள் தொகுதியில் ஓட்டளிக்க முடியாத நிலையே உள்ளது. 

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், போலீசாருக்கு தபால் ஓட்டு அளிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது போல், தேர்தல் நாளன்று, வெளியூர்களில் பணியாற்றும், பத்திரிக்கையாளர்கள்,  ஊடகவியலாளர்களுக்கு தபால் ஓட்டு வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

ஜனநாயகத்தின் நான்காவது துாணாக திகழும் பத்திரிக்கை துறையில் பணியாற்றுவோரின் ஓட்டுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான் என்பதை உணர்ந்து, தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

இது குறித்து, அரசும், தேர்தல் கமிஷனும் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP