மன்மோகன் சிங்கிற்கு பிரதமர், ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 86வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
 | 

மன்மோகன் சிங்கிற்கு பிரதமர், ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 86வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். மன்மோகன் சிங் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்" என்றார்.

 

 

மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்மோகன் சிங் பிறந்தநாளை பல வருடங்களாக சுயநலம் இன்றி நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவைகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் அவரது பங்கினை நினைவு கூற ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP