நாளை வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி!

வெள்ள பாதிப்புக்களை பார்வையிடுவதற்காக வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாளை கேரளா செல்லவிருக்கிறார்.
 | 

நாளை வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி!

வெள்ள பாதிப்புக்கள் மற்றும் மீட்புப்பணிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டிற்கு நாளை செல்லவிருக்கிறார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எர்ணாகுளம், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கேரள மக்கள் தங்கள் வீடுகளை இழந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மூணாறில் அனைத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வயநாடு தொகுதி எம்.பியான ராகுல்காந்தி, தனது தொகுதி மக்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

தொடர்ந்து, நாளை அவர் வயநாடு தொகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து பேசுகிறார். மீட்புப்பணிகள் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP