பொதுத் துறை  வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதன நிதி : பட்ஜெட்டில் அறிவிப்பு

கடன் வழங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்காக, பொதுத் துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன நிதி வழங்கப்பட உள்ளதாக, மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மேலும், தனிநபர் கடனுக்கு  ஆன்-லைனிலேயே ஒப்புதல் வழங்குவது, ஒரு பொதுத் துறை வங்கியின் வாடிக்கையாளர், பிற பொதுத் துறை வங்கிகளின் சேவைகளையும் பெற வழிவகை செய்வது உள்ளிட்ட வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். அத்துடன் ,கடந்த நான்கு ஆண்டுகளில், 4 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதன நிதி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உடனே, தேசிய பங்குச் சந்தையில் இவ்வங்கிகளின் பங்கு மதிப்பு 2.5 சதவீதம் அளவுக்கு இன்று உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP