உ.பி சாலையில் அமர்ந்து தர்ணா: பிரியங்கா காந்தி கைது!

உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 | 

உ.பி சாலையில் அமர்ந்து தர்ணா: பிரியங்கா காந்தி கைது!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். 

கடந்த 17ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க இன்று அப்பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

இதையடுத்து, அவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்களை சந்திக்க அனுமதி மறுப்பது ஏன்? என்று அவர் போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP