ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டை மொதல்ல விசாரிங்க : ராகுல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதுகுறித்து முதலில் விசாரிக்க வேண்டும் என மீ்ண்டும் வலியுறுத்தியுள்ளார்.
 | 

ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டை மொதல்ல விசாரிங்க : ராகுல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதுகுறித்து முதலில் விசாரிக்க வேண்டும் என மீ்ண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடுபோய் உள்ளன. அந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மத்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வாதிட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியது:
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடு போய்விட்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதேசமயம், இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, அதுகுறித்து முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் மாயமானது தொடர்பாக ஊடகங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளவரை ஏன் விசாரிக்கவில்லை?

இந்திய விமானப்படை பயங்கரவாதிகளின்  முகாம்கள் மீது அண்மையில் நடத்திய தாக்குதல் குறித்தும், அதில் இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்தும் வெவ்வேறு தகவல்கள் உலவி வருகின்றன.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்கள் சிலரது குடும்பத்தினர் மனவருத்தத்தை கருத்தில் கொண்டாவது, விமானப்படை  தாக்குதல் குறித்த ஆதாரங்களை அரசு வெளியிட வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டாம் என்பது டெல்லி மாநில காங்கிரஸின் ஒருமித்த முடிவு என்று ராகுல் காந்தி கூறினார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP