சிவகுமாரசாமி மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்

சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமி மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மாேடி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 | 

சிவகுமாரசாமி மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்

சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமி மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மாேடி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பிரதமர் நரேந்திர மாேடி, தன் டுவிட்டர் பக்கத்தில், ‛லிங்காயத் வீரசைவர்களின் மடாதிபதியாக விளங்கிய சிவகுமாரசாமி அவர்கள் மறைந்துவிட்டார் என்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அறிவும், அனுபவமும் நிறைந்த மடாதிபதியான அவரை சந்தித்து நான் ஆசி பெற்றுள்ளேன். அவரின் மறைவால் வாடும் அனைவருக்கும் என் இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

சிவகுமாரசாமி மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்

சிவகுமாரசாமி மறைவுக்கு, காங்., தலைவர் ராகுலும், தன் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என பல தரப்பினரும், இரங்கல் தெரிவித்துள்ளனர். 

துமக்கூரு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிவகுமாரசாமிகளின் உடலுக்கு, பக்தர்கள், ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்செலுத்துவதற்காக, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

நாளை, மாலை,4.30க்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என, சித்தகங்கா மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP