ஜெட்லி குடும்பத்துக்கு பிரதமர் நேரில் ஆறுதல்!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
 | 

ஜெட்லி குடும்பத்துக்கு பிரதமர் நேரில் ஆறுதல்!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார். 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சசருமான அருண்ஜெட்லி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவின் போது பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றிருந்ததால் தொலைபேசி மூலம் ஜெட்லி குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். 

இந்நிலையில், வெளிநாடு பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP