வானிலையில் முன்னேற்றம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

கொச்சியில் வானிலை நிலவரம் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, கேரளாவில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார். அவருடன் மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோரும் பார்வையிட்டு வருகின்றனர்.
 | 

வானிலையில் முன்னேற்றம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

கொச்சியில் வானிலை நிலவரம் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, கேரளாவில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார்.  

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அவர்களுக்கு உணவு, உடை, இதர பொருட்கள், நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. மீட்புப்பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதைதொடர்ந்து கேரளாவில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு திருவனந்தபுரம் வந்தார். மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர், அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கொச்சி வந்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளப்பாதிப்புகளை  ஆய்வு செய்ய தயாரானார். ஆனால் மழை பெய்து கொண்டே இருந்த காரணத்தால் அவர் மீண்டும் கடற்படைத்தளத்திற்கே திரும்பிவிட்டார். மோசமான வானிலை காரணமாக அவரது ஆய்வு ரத்து செய்யப்படுவதாக செய்தி வெளியானது. 

வானிலையில் முன்னேற்றம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

கடற்படை தளத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு, கேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். தேசிய பேரிடர் நிவாரண உதவியில் இருந்து இது வழங்கப்படுகிறது.

வானிலையில் முன்னேற்றம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

தொடர்ந்து தற்போது வானிலை நிலவரம் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார். அவருடன் மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோரும் பார்வையிட்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP