மம்தா பானர்ஜியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: அமித் ஷா

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரையை நடைபெற விடாமல் தடுத்த மம்தா பானர்ஜியை, அம்மாநில மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும், பிரதமர் நரேந்திர மோடியை நாட்டு மக்கள் அனைவரும் நம்புவதாகவும், பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
 | 

மத்தியில் பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து நீக்க, நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 9 பேர் கலந்து கொண்ட பெரிய மாநாடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை குறிப்பிட்டு பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, "பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்துடன் 9 பேர் மேடையில் அமர்ந்து இருந்தனர். ஆனால் உண்மையில் நமக்கு நரேந்திர மோடி என்ற ஒரே பிரதமர் தான். அவரை மக்கள் முழுதாக நம்புகின்றனர்" என்று கூறினார்.

மேலும், மம்தா பேனர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வீழ்த்தும் எனவும் உறுதியளித்தார். "பாரதிய ஜனதாவின் ரத யாத்திரையை தடுத்த மம்தா பானர்ஜியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்றும் ஷா பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP