சிறுபான்மையினருக்கு எதிரான நாடு பாகிஸ்தான்: அப்பாஸ் நக்வி

பாகிஸ்தானை போல் இந்தியா சிறுபான்மையினரை நசுக்க முயற்சிக்கவில்லை என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் நஸ்ருதீன்ஷா ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
 | 

சிறுபான்மையினருக்கு எதிரான நாடு பாகிஸ்தான்: அப்பாஸ் நக்வி

பாகிஸ்தானை போல் இந்தியா சிறுபான்மையினரை நசுக்க முயற்சிக்கவில்லை என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திரைப்பட நடிகர் நஸ்ருதீன்ஷா ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதில் மனிதர்கள் கொல்லப்படுவதற்கு முக்கியத்துவம் தராமல் பசு வதைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்றும் இந்தியாவில் வாழ பயமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவை பாேல் பாகிஸ்தான் சிறுபான்மையினரை நடத்தவில்லை என்றும் மாறாக பாதுகாப்பாக வாழுகின்றனர் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் கருத்தை ஒன்று வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள முக்தார் அப்பாஸ் நக்வி பாகிஸ்தானில் இது வரை இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் 90 சதவீதம் பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டும் அதற்கு உடன்படாதவர்கள் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும் உள்ளனர் என்றார். மேலும் 100 எலிகளை சாப்பிட்ட பிறகு புண்ணிய பயணம் மேற்கொள்வது போல் பிரதமர் இம்ரான்கானின் ப‌ேச்சு உள்ளது என்றார்.  யூசுப்கான், திலிப்குமார், அமீர்கான், சல்மான் கான், ஷாருக்கான் பாேன்ற சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த கலைஞர்கள் இந்தியாவில் உரிய அங்கிகாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்றும் பாகிஸ்தானி்ல் இந்தியாவை சேர்ந்த எந்த கலைஞர்களின் பெயரை பிரதமர் இம்ரான் கான் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP