ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தால், ஆட்சியை கவிழ்த்துவிடுவேன்: சுப்ரமணிய சுவாமி

ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தால், ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அயோத்தி வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வந்தால் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
 | 

ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தால், ஆட்சியை கவிழ்த்துவிடுவேன்: சுப்ரமணிய சுவாமி

ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தால், ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியிருப்பது அரசியல் சூழலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுப்ரமணியன் சுவாமி, "உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் தான் எதிர்த்தரப்பாக உள்ளது. 

எனவே மத்திய அரசானாலும் சரி, உத்தரப் பிரதேச மாநில அரசானாலும் சரி ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்தால் அந்த ஆட்சியை கவிழ்த்து விடுவேன். இந்த வழக்கில் என்னை எதிர்க்க மத்திய பா.ஜ.க அரசுக்கும், உத்தப் பிரதேச மாநில அரசுக்கும் துணிவு உள்ளதா?" என்று அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அங்குள்ள முஸ்லீம்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை என்று தெரிவித்த அவர், அயோத்தி வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வந்தால் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP