ஒடிசாவில் வருகிற 20 ம் தேதி நீட் தேர்வுகள்

ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் நேற்று நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு இம்மாதம் 20ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
 | 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் எனும் மருத்துபடிப்புகளுக்கான தகுதித்தேர்வுக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும்  ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான அந்த தேர்வு மே 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒடிசாவில் ஃபனி புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. எனவே, ஓடிஸா நீங்களாக, நாடெங்கிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேர்வு முடிவடைந்தது . 

இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வை மறு தேதி குறிப்பிடாமல் தேசிய தேர்வுகள் முகமை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் நேற்று ஒடிசா தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்துக்கு வரும் 20-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை இன்று அறிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP