நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெறுவதற்கான நீட் நுழைவுத்தேர்வு தமிழகத்தில் 14 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 | 

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெறுவதற்கான நீட் நுழைவுத்தேர்வு  தமிழகத்தில் 14 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்களும், புதுச்சேரியில் 10 மையங்களில் 7000-க்கும் மேற்பட்ட மாணவர்களும் தேர்வு எழுதி வருகின்றனர். தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் உதந்த சோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP