Logo

கட்சிரோலி நக்சல் தாக்குதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிக்கு தொடர்பு!

கட்சிரோலி நக்சல் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி என்று தெரிய வந்துள்ளது.
 | 

கட்சிரோலி நக்சல் தாக்குதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிக்கு தொடர்பு!

கட்சிரோலி நக்சல் தாக்குதலில்  கைது செய்யப்பட்டவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி என்று தெரிய வந்துள்ளது. 

கடந்த மே மாதம் 1ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில், போலீசார் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 15 போலீசாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பின்னர், இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், நக்சல்கள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி கைலாஷ் ராம்சந்தனி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி என தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து கட்சிரோலி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவீந்திர வசேகர் கூறும்போது, "கட்சி தொடக்க காலம் முதல் ராம்சந்தனி எங்களுடன் இருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP