இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை!!

இந்தியாவில் ஏற்படும் கொலைகளுக்கு, காதல் விவகாரங்கள், மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது தேசிய குற்ற பதிவுகள் பணியகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
 | 

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை!!

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளுக்கு, காதல் விவகாரங்கள், மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது தேசிய குற்ற பதிவுகள் பணியகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

சமீபத்தில் வெளியாகியுள்ள தேசிய குற்ற பதிவுகள் பணியகம் அறிக்கையின்படி, கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் நடைபெற்றிருக்கும் கொலைகளுக்கு காதல் விவகாரங்கள் மூன்றாவது முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாப், குஜராத், ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கங்களில் ஏற்பட்டிருக்கும் கொலைகளுக்கு காதல் விவகாரங்களினால் மேற்கொள்ளப்படும் கௌரவ கொலைகள் முதல் முக்கிய காரணமாக அமைந்துள்ளது இந்த அறிக்கையின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 

இந்த மாநிலங்களை தொடர்ந்து, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கொரவ கொலைகள் இரண்டாவது முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும், திருமணத்திற்கு பிறகு சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் தொடர்புகளும் கொலைகளுக்கு ஓர் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

மேலும், கடந்த 2001ஆம் ஆண்டு சுமார் 36,202 கொலைகள், 2017ஆம் ஆண்டு 28,653 கொலைகள் என, கடந்த 16ஆண்டுகளில், கொலைகளின் சதவீதம் சுமார் 21 சதவீதமாக குறைந்துள்ள நிலையிலும், சில மாநிலங்களில் கௌரவ கொலைகள் அதிகரித்து வருவது அறிக்கையின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலைகளுக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த் காரணங்கள் இருப்பதாகவும், சாதி மதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இத்தகைய வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார் ஜவஹர்லால் பல்கலைகழக பேராசிரியரான பிரத்திக்ஷா பக்ஷி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP