பெட்ரோல் விலையை குறைப்பதில் அக்கறை காட்டிய மோடி - சவுதி அமைச்சர் தகவல்

ஜி-20 மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, எரிபொருள் விலை விஷயத்தில் இந்திய வாடிக்கையாளர்களின் நலன் குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருப்பதை அவர் எடுத்துரைத்தார் என்று சவுதி அமைச்சர் கூறியுள்ளார்.
 | 

பெட்ரோல் விலையை குறைப்பதில் அக்கறை காட்டிய மோடி - சவுதி அமைச்சர் தகவல்

பெட்ரோலியப் பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை காட்டியதாக சவுதி அரேபியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் காலித் அல் பாலிஹ் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்கையில் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்றோரின் கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

OPEC என்று சொல்லக் கூடிய, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அடங்கிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் நடைபெற்றது. அப்போது சவுதி அமைச்சர் காலித் அல் பாலிஹ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்களை நாங்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் பரிசீலித்து வருகிறோம். அமெரிக்க அதிபர் டிரம்பை போலவே இந்த விஷயத்தில் மிகவும் அக்கறை காட்டியவர் மோடி. அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியை நாங்கள் சந்தித்தோம். இந்திய வாடிக்கையாளர்கள் குறித்து தாம் அக்கறை கொண்டிருப்பது குறித்து மிகுந்த முக்கியத்துவத்துடன் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துரைத்தார். 

இந்தியாவில் வெவ்வேறு தருணங்களில் 3 முறை நடைபெற்ற எரிபொருள் தொடர்புடைய மாநாடுகளில், பெட்ரோலியப் பொருள்களின் விலை குறித்து மோடி மிகுந்த அக்கறையுடன் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். கச்சா எண்ணெய் விலையை குறைக்கும்போது மோடி, டிரம்ப் உள்ளிட்டோரின் கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம் என்றார் அவர்.

இந்தியா தனது 80 சதவீத எரிபொருள் தேவைக்கு இறக்குமதியை சார்ந்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP