சாரதா பீடத்திற்கு வழி திறக்க வேண்டும்: பிரதமருக்கு மெஹ்பூபா முஃப்தி கடிதம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இந்துக்களின் புனித தலமான சாரதா பீடத்திற்கு காஷ்மீரி பண்டிதர்கள் செல்ல வழி அமைத்துத் தரப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி கடிதம் எழுதியுள்ளார்.
 | 

சாரதா பீடத்திற்கு வழி திறக்க வேண்டும்: பிரதமருக்கு மெஹ்பூபா முஃப்தி கடிதம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இந்துக்களின் புனித தலமான சாரதா பீடத்திற்கு காஷ்மீரி பண்டிதர்கள் செல்ல வழி அமைத்துத் தரப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி கடிதம் எழுதியுள்ளார்.

எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் நிறுவிய பீடங்களில் ஒன்றான சாரதா பீடம், தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ளது. காஷ்மீர் இந்துக்களின் முக்கியமான புனித தலமாக இது பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக, ஸ்ரீநகரிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் பகுதிக்கு பேருந்து சேவை துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாரதா பீடத்திற்கு இடத்திற்கு இந்துக்கள் சென்று வழிபட ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.

தற்போது கர்தர்பூர் சாலை அமைக்கப்பட்டு, பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள குருத்வாராக்களுக்கு சீக்கியர்கள் சென்று வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, மீண்டும் சாரதா பீடத்திற்கு இந்துக்கள் செல்வது குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முன்னாள் காஷ்மீர் முதல்வர் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், காஷ்மீரின் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு இடம் சாரதா பீடம் என்றும், கர்தர்பூர் சாலையை போல, இந்த திட்டமும் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட உதவும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி, சாரதா பீடத்திற்கு இந்துக்கள் செல்லும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னதாக, சாரதா பீடம், கடஸ்ராஜ் உள்ளிட்ட இந்துக்களின் புனித தலங்களுக்கு, இந்தியர்கள் வந்து வழிபட ஏற்பாடுகள் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP