இந்தியாவில் 'மெகா ஷாப்பிங் திருவிழா' - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!

மற்ற நாடுகளில் நடைபெறுவது போல வருடாந்திர மெகா ஷாப்பிங் திருவிழா விரைவில் இந்தியாவில் தொடங்கப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

இதன் மூலம் உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே வர்த்தக பரிமாற்றம் நடைபெறும் என்றும் இதனால் இந்தியாவுக்கு வருவாய் கிடைத்து இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து பேசிய அவர்,  இந்த மெகா ஷாப்பிங் திருவிழாக்கள் நாடு முழுவதும் 4 இடங்களில் நடைபெறும். விலையுயர்ந்த கற்கள், தங்கம் வெள்ளி உள்ளிட்ட உலோகத்திலான நகைகள், ஆடைகள், தோல் பொருட்கள் முதல் யோகா வரை என பல விதமான பொருட்கள் இதில் அடங்கும்.

மேலும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு அந்த பொருட்கள் மீதான வரிகளை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி 6.05 சதவீதம் குறைந்து ஆகஸ்ட் மாதத்தில் 26.13 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. 

இந்தத் திட்டமானது ஏற்றுமதியாளர்கள் ஊக்கம் தரும் விதத்தில் அமையும். இதன் மூலம் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP