பிரச்னை வரும்போதெல்லாம் ராமரிடம் செல்கிறது பா.ஜ.க: மல்லிகார்ஜுன் கார்கே

சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்திக்கு சென்றிருந்ததை சுட்டிக்காட்டிய காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே, சிவ சேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் தேர்தல் வரும்போதெல்லாம் கடவுள் நினைவுக்கு வருவதாக விமர்சனம் செய்த்துள்ளார்.
 | 

அயோத்தியில் ராமர் கோவிலை உடனடியாக கட்டும் நடவடிக்கைகளை துவக்க வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இன்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு, ராம ஜென்ம பூமியில் பேரணி நடத்தினர். அதேநேரம், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனது குடும்பத்தினருடன் ராம ஜென்ம பூமிக்கு சென்று, அங்குள்ள ராம் லாலா சிலையை வழிபட்டு வந்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தாக்கரே, "2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ராமர் கோவில் கட்டும் பணிகள் துவக்கப் பட வேண்டும், இல்லாவிட்டால் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது" என எச்சரித்தார்.

இதை குறிப்பிட்டு பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் வரும்போதெல்லாம் எல்லோரும் அங்கே செல்கிறார்கள். கடந்த 4-5 ஆண்டுகளில் உத்தவ் தாக்கரே அங்கே ஏன் செல்லவில்லை? யார் தடுத்தார்கள்? ஒரு பக்கம் பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துவிட்டு, மறுபக்கம் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறிக்கொள்கிறார்கள். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது. எல்லோருக்கும் தேர்தல் வரும்போது தான் ராமரின் நியாபகம் வருகிறது. பிரச்னை வரும்போதெல்லாம் மனிதனுக்கு கடவுள் நியாபகம் வருவதாக சொல்லுவார்கள். இப்போது பாரதிய ஜனதாவுக்கு தேர்தலில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், கடவுள் நியாபகம் வந்துள்ளது. மக்களை பிரிக்க பார்க்கிறார்கள்" என்று கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP