ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்த கர்நாடக ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
 | 

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமியின் ஆட்சியின் மீது, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

நேற்று சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட சமயத்தில், வேண்டுமென்றே நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதாக பாஜக எம்.எல்.ஏக்கள் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று(ஜூலை 19) பிற்பகல் 1.30 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆளுநர் முதல்வருக்கு கெடு வைத்திருந்தார். ஆனால் காலக்கெடு முடிந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

இதற்கிடையே, ஆளுநர் காலக்கெடு விதித்ததற்கு தடை விதிக்கக்கோரியும், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது என்றும் கூறி  கர்நாடக காங்கிரஸ் தினேஷ் குண்டுராவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP