விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றியிருப்பதோடு, அதற்கான தீர்ப்பு வழங்கப்படும் வரை வயது வரம்பின்றி பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
 | 

இதை தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக,அங்கு ஐயப்பனை தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆர்வாலர் திருப்தி தேசாய் உட்பட 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சபரிமலை தேவஸ்வம் குழு கூறுகையில், திருப்தி தேசாய் போன்ற பெண்கள் வெறும் விளம்பரத்திற்காகவே கோவிலுக்கு வருவதாகவும், விளம்பரம் மற்றும் அரசியல் பெயருக்காக சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கோவிலுக்குள் அனுமதியில்லை எனவும் அவர்களுக்கு கேரள அரசு எந்த பாதுகாப்பையும் வழங்காது எனவும் கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்த ஆர்வாலர் திருப்தி தேசாய், "கேரள அரசிடம் பாதுகாப்பு கோரி நாங்கள் மனுக்கள் சமர்ப்பிப்பது உறுதி. எனினும், தேவஸ்வம் குழு பாதுகாப்பு அளித்தாலும், அளிக்காவிட்டாலும் வரும் நவம்பர் 20ஆம் தேதிக்குள் நான் சபரிமலை கோவிலுக்குள் நிச்சயமாக செல்வேன்" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில், சபரிமலைக்குள் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் அவர்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளது சபரிமலை தேவஸ்வம் குழு.

இதனிடையில், சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பை தொடர்ந்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பிபி நூஹ் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP