காஷ்மீர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 33 பேர் பலி

காஷ்மீரில் கெஷ்வான் - கிஷ்த்வார் என்ற பகுதிகளுக்கு இடையே சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

காஷ்மீர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 33 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கெஷ்வான் - கிஷ்த்வார் என்ற பகுதிகளுக்கு இடையே சென்ற மினி பேருந்து ஒன்று, அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், பலர் காயமடைந்த  நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பேருந்துகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை  மீட்கும் பணியானது நடைபெற்று வருகிறது. 

இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP