ஜேஇஇ தேர்வு: வினாத்தாள் மதிப்பீட்டில் மாற்றம்

ஜேஇஇ முதல்நிலை தேர்வு வினாத்தாள் மதிப்பீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைனஸ் மார்க் வழங்கும் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஜேஇஇ தேர்வு: வினாத்தாள் மதிப்பீட்டில் மாற்றம்

ஜேஇஇ முதல்நிலை தேர்வு வினாத்தாள் மதிப்பீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைனஸ் மார்க் வழங்கும் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிலையில், ஜேஇஇ முதல்நிலை தேர்வு வினாத்தாள் மதிப்பீடு நடைமுறைகளில் வரும் ஆண்டு முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வினாத்தாளில் இடம்பெறும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளுக்கு அளிக்கும் தவறான விடைகளுக்கு மட்டுமே இனி மதிப்பெண் குறைக்கப்படும். கோடிட்ட இடத்தை நிரப்புக உள்பட இதர வடிவிலான கேள்விகளில் தவறான பதில்களுக்கு மதிபெண் குறைக்கப்படாது.
வினாத்தாள் விவரங்கள் என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP