காஷ்மீரில் பரபரப்பு...ஜெய்ஷ்-இ- முகம்மது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நுழைய முயற்சி செய்வதாக வந்த தகவலையடுத்து, பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இருவர் நமது இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

ஜெய்ஷ்-இ- முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் அசார் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த பயிற்சி பெற்ற 15 தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த சூழ்நிலையில், காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரால் நடத்திய தேடுதல் வேட்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனவும் தெரிய வந்துள்ளது. 

newstm.in

உருவாகிறது புதிய மாநிலம்; உடைகிறது ஜம்மு - காஷ்மீர்?

பரபரப்பான சூழ்நிலையில், காஷ்மீர் ஆளுநரை சந்தித்தார் ஒமர் அப்துல்லா!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP