இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் மறக்கமுடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: வெங்கையா நாயுடு!

இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் மறக்கமுடியாத பதிலடி கொடுக்கப்படும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
 | 

இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் மறக்கமுடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: வெங்கையா நாயுடு!

இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் மறக்கமுடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, "இந்தியா தாமாக முன்வந்து யார் மீதும் தாக்குதல் நடத்தாது. அதேநேரத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும். 

நமது அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.  மனித குலத்தின் அழிவிற்கு நாம் வழி காட்டுகிறோம் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

காஷ்மீர் விவகாரத்திலும் சரி, நமது உள்நாட்டு விவகாரத்திலும் சரி, வேறு எந்த நாடுகளும் தலையிடக் கூடாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு" என்று பேசினார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP