ஹிமாச்சல் பள்ளி பேருந்து விபத்து; 27 குழந்தைகள் பலி

ஹிமாச்சல் பிரதேசத்தில் இன்று ஒரு பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில், 27 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகினர்.
 | 

ஹிமாச்சலின் குர்ச்சால் என்ற ஊருக்கு அருகே, பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்த பேருந்து, திடீரென அந்த பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பள்ளி குழந்தைகள் உட்பட 30 பேர் பலியானார்கள். பள்ளி ஆசிரியைகள் இருவர் மற்றும் பேருந்தின் ஓட்டுநரும் இந்த விபத்தில் இறந்தனர். 

13 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40க்கும் மேற்பட்டோர் இந்த பேருந்தில் சென்றதாக தெரிகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, இந்த சம்பவத்திற்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். 

ஹிமாச்சல் முதல்வர் ஜெய் ராம் தாகூர் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP