நன்கொடை அளிப்பதிலும் இவர்தான் நம்பர் ஒன்!

ஆசிய அளவில் பெரிய பணக்காரராக திகழும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக நன்கொடை அளிப்பதிலும் முதலிடம் பெற்றுள்ளார்.கல்வி உள்ளிட்டவை சார்ந்த பணிகளுக்கு அவர் மொத்தம் 437 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
 | 

நன்கொடை அளிப்பதிலும் இவர்தான் நம்பர் ஒன்!

ஆசிய அளவில் பெரிய பணக்காரராக திகழும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக நன்கொடை அளிப்பதிலும் முதலிடம் பெற்றுள்ளார்.

2017 அக்டோபர் முதல் 2018 செப்டம்பர் வரையிலான ஓராண்டில் மட்டும் இவரும், இவரது குடும்பத்தினரும் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை சார்ந்த சேவைகள் மற்றும் பணிகளுக்கு மொத்தம் 437 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பானிக்கு அடுத்தபடியாக, சமீபத்தில் இவரது சம்பந்தியான தொழிலதிபர் அஜய் பிரமால் பல்வேறு நலப்பணிகளுக்காக 200 கோடி நன்கொடை அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு அனில் அம்பானி 71 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP