Logo

அவர் அப்படிதான்... சாரி... டிரம்புக்காக இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ள அமெரிக்க எம்.பி.!

அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் பலர், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவுகரம் நீட்டியுள்ளனர். அத்துடன், அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினரான பிராட் செர்மன், காஷ்மீர் விஷயம் குறித்த அமெரிக்க அதிபரின் பேச்சுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
 | 

அவர் அப்படிதான்... சாரி... டிரம்புக்காக இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ள அமெரிக்க எம்.பி.!

ஜம்மு -காஷ்மீர் பிரச்னையில் தாம் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென இந்திய பிரதமர்  நரேந்திர மோடி தம்மிடம் கேட்டு கொண்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெளியாகியுள்ள செய்தி, உலக அளவில் அரசியல் அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் பலர், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவுகரம் நீட்டியுள்ளனர். அத்துடன், அமெரிக்க நாடாளுமன்ற மேலவை (செனட்) உறுப்பினரான பிராட் செர்மன், காஷ்மீர் விஷயம் குறித்த அமெரிக்க அதிபரின் பேச்சுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மூன்றாவது நாட்டின் தலையீட்டை என்றைக்கும் அனுமதித்ததில்லை என்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இந்த நிலையில், ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடிதம்மிடம் கோரியதாக, டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது, முதிர்ச்சியற்ற, சங்கடத்தை  ஏற்படுத்தும் செயலாகும். அவரது இந்த பேச்சுக்காக,  அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஸ்சிர்ங்லாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என பிராட் செர்மன் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP